Select Menu

clean-5

Wisata

Budaya

Kuliner

Kerajaan

kota

Suku

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது.
இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்

மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.
மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.
சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.
கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர். 
பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 
முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.
நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.
பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.

நோக்கியாவின் சாதனைகள்
1871 - டயர், பூட் மற்றும் கேபிள்களைத் தயாரித்தது.
1987 - முதல் மொபைல் போன் மொபிரா சிட்டிமேன் வெளியானது எடை 1 கிலோ.
1992 - முதல் டிஜிட்டல் ஜி.எஸ்.எம். போன் நோக்கியா 1011 வெளியானது. 
2003 - பேசிக் 1100 என்ற மொபைல் போனை வெளியிட்டது. 25 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டன. நோக்கியா அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த மொபைல் இதுதான். மக்களிடையே அதிகம் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனம் என்ற பெயரினைப் பெற்றது.
2011 - தன் சிம்பியன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கி, விண்டோஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 
2013 - இறுதியாக 41 மெகா பிக்ஸெல் திறனுடன், நோக்கியா லூமியா 1020 என்ற போனை வெளியிட்டது. 

நோக்கியா தொடாத நபரே இல்லை
கடந்த 15 ஆண்டுகளாக, நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அதில் நோக்கியா போன் ஒன்று இருக்கும். 2000 ஆம் ஆண்டில் நோக்கியா போன் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அது நிச்சயம் நோக்கியா 5110 என்ற மாடலாகத்தான் இருந்திருக்கும். இதே போல புகழ் பெற்ற நோக்கியாவின் போன்கள் 8210, 3210 மற்றும் 3310 ஆகியவை ஆகும். 2003ல் வந்த நோக்கியா 1100 மாடல், அதிக விற்பனையை மேற்கொண்டு, சரித்திரத்தில் இடம் பெற்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை
சாம்சங் - 10 கோடியே 75 லட்சம் - 24.7%
நோக்கியா - 6 கோடியே 9 லட்சம் - 14%
ஆப்பிள் - 3 கோடியே 19 லட்சம் - 7.3%
எல்.ஜி. - 1 கோடியே 70 லட்சம் - 3.9%
இஸட். டி.இ. - 1 கோடியே 52 லட்சம் - 3.5%
மற்ற நிறுவனங்கள் - 20 கோடியே 23 லட்சம் - 46.5%

ஹார்ட்வேர் டிப்ஸ்(hardware)

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் - ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்னை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்னை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக் கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப் பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

Windowsxp shortcutkeys


General keyboard shortcuts

  • CTRL+C (Copy)
  • CTRL+X (Cut)
  • CTRL+V (Paste)
  • CTRL+Z (Undo)
  • DELETE (Delete)
  • SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
  • CTRL while dragging an item (Copy the selected item)
  • CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
  • F2 key (Rename the selected item)
  • CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
  • CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
  • CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
  • CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
  • CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
  • SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
  • CTRL+A (Select all)
  • F3 key (Search for a file or a folder)
  • ALT+ENTER (View the properties for the selected item)
  • ALT+F4 (Close the active item, or quit the active program)
  • ALT+ENTER (Display the properties of the selected object)
  • ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
  • CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously)
  • ALT+TAB (Switch between the open items)
  • ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
  • F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
  • F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
  • SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
  • ALT+SPACEBAR (Display the System menu for the active window)
  • CTRL+ESC (Display the Start menu)
  • ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu)
  • Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
  • F10 key (Activate the menu bar in the active program)
  • RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
  • LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
  • F5 key (Update the active window)
  • BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)
  • ESC (Cancel the current task)
  • SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
  • CTRL+SHIFT+ESC (Open Task Manager)

Dialog box keyboard shortcuts

If you press SHIFT+F8 in extended selection list boxes, you enable extended selection mode. In this mode, you can use an arrow key to move a cursor without changing the selection. You can press CTRL+SPACEBAR or SHIFT+SPACEBAR to adjust the selection. To cancel extended selection mode, press SHIFT+F8 again. Extended selection mode cancels itself when you move the focus to another control.
  • CTRL+TAB (Move forward through the tabs)
  • CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
  • TAB (Move forward through the options)
  • SHIFT+TAB (Move backward through the options)
  • ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
  • ENTER (Perform the command for the active option or button)
  • SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
  • Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
  • F1 key (Display Help)
  • F4 key (Display the items in the active list)
  • BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft natural keyboard shortcuts

  • Windows Logo (Display or hide the Start menu)
  • Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
  • Windows Logo+D (Display the desktop)
  • Windows Logo+M (Minimize all of the windows)
  • Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)
  • Windows Logo+E (Open My Computer)
  • Windows Logo+F (Search for a file or a folder)
  • CTRL+Windows Logo+F (Search for computers)
  • Windows Logo+F1 (Display Windows Help)
  • Windows Logo+ L (Lock the keyboard)
  • Windows Logo+R (Open the Run dialog box)
  • Windows Logo+U (Open Utility Manager)

Accessibility keyboard shortcuts

  • Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
  • Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
  • Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
  • SHIFT five times (Switch the StickyKeys either on or off)
  • NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
  • Windows Logo +U (Open Utility Manager)

Windows Explorer keyboard shortcuts

  • END (Display the bottom of the active window)
  • HOME (Display the top of the active window)
  • NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
  • NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
  • NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
  • LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
  • RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)

Shortcut keys for Character Map

After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
  • RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line)
  • LEFT ARROW (Move to the left or to the end of the previous line)
  • UP ARROW (Move up one row)
  • DOWN ARROW (Move down one row)
  • PAGE UP (Move up one screen at a time)
  • PAGE DOWN (Move down one screen at a time)
  • HOME (Move to the beginning of the line)
  • END (Move to the end of the line)
  • CTRL+HOME (Move to the first character)
  • CTRL+END (Move to the last character)
  • SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)

Microsoft Management Console (MMC) main window keyboard shortcuts

  • CTRL+O (Open a saved console)
  • CTRL+N (Open a new console)
  • CTRL+S (Save the open console)
  • CTRL+M (Add or remove a console item)
  • CTRL+W (Open a new window)
  • F5 key (Update the content of all console windows)
  • ALT+SPACEBAR (Display the MMC window menu)
  • ALT+F4 (Close the console)
  • ALT+A (Display the Action menu)
  • ALT+V (Display the View menu)
  • ALT+F (Display the File menu)
  • ALT+O (Display the Favorites menu)

MMC console window keyboard shortcuts

  • CTRL+P (Print the current page or active pane)
  • ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
  • SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
  • F1 key (Open the Help topic, if any, for the selected item)
  • F5 key (Update the content of all console windows)
  • CTRL+F10 (Maximize the active console window)
  • CTRL+F5 (Restore the active console window)
  • ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item)
  • F2 key (Rename the selected item)
  • CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote desktop connection navigation

  • CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
  • ALT+PAGE UP (Switch between programs from left to right)
  • ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
  • ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
  • ALT+HOME (Display the Start menu)
  • CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
  • ALT+DELETE (Display the Windows menu)
  • CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.)
  • CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer navigation

  • CTRL+B (Open the Organize Favorites dialog box)
  • CTRL+E (Open the Search bar)
  • CTRL+F (Start the Find utility)
  • CTRL+H (Open the History bar)
  • CTRL+I (Open the Favorites bar)
  • CTRL+L (Open the Open dialog box)
  • CTRL+N (Start another instance of the browser with the same Web address)
  • CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L)
  • CTRL+P (Open the Print dialog box)
  • CTRL+R (Update the current Web page)
  • CTRL+W (Close the current window)

வாய்ஸ் பைல் அனுப்பும் வாட்ஸ் அப்

மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது, உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு, இவ்வகையில் முதல் இடம் பெற்றுள்ள, வாட்ஸ் அப், அண்மையில் இன்னும் ஒரு புதிய வசதியினை அதன் வாடிக்கையாளர்களுக்கு த் தந்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்கள் குரல் வழி செய்தியையும் இனி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். ""வாய்ஸ் மெசேஜ்” என்று அழைக்கப்படும் இந்த வசதியை அறிமுகப்படுத்திய போதே, வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் 35 கோடி வாடிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த வசதி அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஐ போன், ஆண்ட்ராய்ட், பிளாக் பெரி, விண்டோஸ் போன் மற்றும் சிம்பியன் என அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், வாட்ஸ் அப் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலின் படி, ஒரு நாளில், 24 மணி நேர காலத்தில், 2,700 கோடி செய்திகளை, வாட்ஸ் அப் அனுப்பி சாதனை செய்தது. இன்னொரு வகை தகவலில், வாட்ஸ் அப், அனுப்பிய வகையில் 1,100 கோடி செய்திகளையும் , பெற்ற வகையில் 2,000 கோடி செய்திகளையும் செயல்படுத்தியுள்ளது. ஆக, மொத்தம் 3,100 கோடி செய்திகளைக் கையாண்டுள்ளது. ஒவ்வொரு நாளூம், வாட்ஸ் அப் மூலம் 32 கோடியே 50 லட்சம் போட்டோக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி ஆகும். இதே போல 2 கோடி வாடிக்கையாளர்களை, வாட்ஸ் அப், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் பெற்றுள்ளது.
உலக அளவில், 45 நாட்கள் காலத்தில், ஏறத்தாழ 5 கோடி பேர் முதல் முறையாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாய்ஸ் மெசேஜிங் மூலம், ஒருவர் தங்கள் குரலைப் பதிவு செய்திடலாம். உடனடியாக, அந்த வாய்ஸ் பைல் உரியவரை, மெசேஜ் செல்லும் அதே வேகத்தில் சென்றடைகிறது. பெறுபவர், உடனே அதனை இயக்கிக் குரல் வழி செய்தியைக் கேட்கலாம். அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் மொபைல் சாதனத்தில் இது பைலாக பதியப்படுவதால், எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், வாய்ஸ் மெயிலை இயக்கிக் கேட்கலாம். இதனைப் பதிவு செய்திட, டெக்ஸ்ட் மெசேஜ் விண்டோவில், வலது பக்கம் உள்ள மைக் ஐகானை அழுத்திப் பேச வேண்டும். விரலை ஐகானிலிருந்து எடுத்தவுடன், வாய்ஸ் மெயிலாக இது செல்லும். வாய்ஸ் மெயிலை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தால், இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், வாய்ஸ் மெசேஜ் அழிக்கப்படும். அனுப்பப்பட்ட வாய்ஸ் மெயிலைப் பெற்றவர் கேட்டு முடித்துவிட்டால், வழக்கம் போல கூடுதல் டிக் அடையாளம் மூலம் அது தெரிவிக்கப்படுகிறது.
வாய்ஸ் மெசேஜைப் பெறுபவர் தன் போட்டோவுடன் அக்கவுண்ட்டைப் பதிந்து வைத்திருந்தால், அவருடைய படம், மெசேஜ் கால அளவு ஆகியவை காட்டப்படும். பெறுபவர் மெசேஜைக் கேட்டுவிட்டல், ஐகான் நீல நிறத்திற்கு மாறும்.
வாய்ஸ் மெசேஜைப் பெறும் ஒருவர், மெசேஜ் விண்டோவில் இருக்கும் ஐகான அழுத்தி, அனுப்பியவர் பதிந்த செய்தியைக் கேட்கலாம். இதற்கெனத் தனியே ஆடியோ பிளேயர் எதுவும் தனியே இயக்கப்பட மாட்டாது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனிலேயே குரலைக் கேட்கலாம்.
ஒரு வாய்ஸ் மெசேஜ் எவ்வளவு நேரம் பதியப்படலாம் என்பதற்குக் கால அளவு என எதனையும் வாட்ஸ் அப் தரவில்லை.
இந்த வசதியையும் சேர்த்து, வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம், டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ மற்றும் குரல் எனப் பல வழிகளில் நண்பர்கள் தங்களுக்குள் எளிதாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
இதே போன்றதொரு அப்ளிகேஷன் ஒன்றை, இந்திய நிறுவனமான பாரதி சாப்ட்பேங்க், ஹைக் (Hike) என்ற பெயரில் ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் அப்ளிகேஷனை 50 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் டென்சென்ட் நிறுவனம் WeChat என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷனைத் தந்து வருகிறது.
வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பொறுத்த வரை, இந்நிறுவனம் இதற்கென எந்த விளம்பரத்தினையும் வெளியிட்டதில்லை. மெசேஜ் அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும் மட்டுமே, பல கோடிக்கணக்கானவர்களை இதனைப் பயன்படுத்த வைத்துள்ளது. வாட்ஸ் அப் ஒரு குறையை மட்டும் விட்டு வைத்துள்ளது. படங்களை அனுப்புகையில் அதற்கான குறிப்புகளைத் தனி மெசேஜாகத்தான் அனுப்ப முடிகிறது. அதாவது ஒரு படத்தை அனுப்பிய பின்னர், அதற்கான குறிப்பினை தனியே இன்னொரு மெசேஜாகத்தான் அனுப்ப முடியும். விரைவில் வாட்ஸ் அப் இந்தக் குறையை நீக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கைப் இணைந்து கிடைக்கும்


பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் பயன்படுத்தும் வீடியோ சேட் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தொகுப்பான ஸ்கைப், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தொகுப்புடன் இணைந்து தரப்படுகிறது. தற்போது ஏறத்தாழ, 30 கோடி பேர் ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து மைக்ரோசாப்ட் தருகிறது.
விண்டோஸ் பயனாளர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும் இனிய அனுபவத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனைத் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 8ல் இயங்கிய ஸ்கைப் குறித்து பல பயனாளர்கள் அவர்களின் பின்னூட்டக் கருத்துக்களைத் தந்துள்ளதாகவும், அவை அனைத்தும் புதிய ஸ்கைப் தொகுப்பின் வடிவமைப்பில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

விண்டோஸ்8க்கானஆண்ட்டிவைரஸ்

பல வாசகர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தாங்கள் மாறியுள்ளதாகவும், அதற்கென தற்போது கிடைக்கும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றனவா என்று கேட்டு எழுதியுள்ளனர். சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்தால்தான், இந்த புதிய சிஸ்டத்திற்கு மாறலாம் என்று முடிவு செய்திருப்பதனையும் தெரிவித்துள்ளனர்.
இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு அத்தகைய ஏழு தொகுப்புகளுக்கான விபரங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எது தேவை என வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், முடிவு செய்து ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது, விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தங்களின் கம்ப்யூட்டர்களில் கொண்டுள்ளவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு
எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://windows.microsoft.com/en-us/windows/security-essentials-download
2. ஏ.வி.ஜி. (AVG): அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது. இதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://free.avg.com/inen/homepage
3. பண்டா செக்யூரிட்டி (Panda Security): மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம். http://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையதளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம்.
4. அவாஸ்ட் (Avast): இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது. இலவசமாக இதனைப் பெற, நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:
http://www.avast.com
5.பிட் டிபண்டர் ஆண்ட்டி வைரஸ் ப்ளஸ் (Bit Defender Anti Virus Plus): இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம். ஆன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது. நம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பாப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை. இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bitdefender. com/Downloads/
6. அவிரா (Avira): அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோ கிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது. இலவசமாக இதனைப் பெற http://www.avira.com/en/avira-free-antivirus என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.
7. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் (Kaspersky Antivirus): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது. இதனைப் பெற
http://usa.kaspersky.com/downloads என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன், இன்னும் சில இணைய வெளியில் கிடைக்கலாம். அனைத்து புரோகிராம்கள் குறித்தும் அறிந்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதே நமக்குப் பாதுகாப்பினைத் தரும்

Unique News